27 அடி உயர "வேல் வழிபாடு" யாத்திரை
27 அடி உயர "வேல் வழிபாடு" யாத்திரை
திருப்பரங்குன்றம்
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள முருகன் கோவிலில் இருந்து திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வழிபாட்டிற்காக 27 அடி உயரமுள்ள 1800 எடை கொண்ட ஒருவேல் யாத்திரையாக எடுத்துவரப்பட்டது. பின்னர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் இந்து தமிழ் கட்சி மாநிலத் தலைவர் ராம.ரவிக்குமார், பிரதமரின் மக்கள் நலத்திட்ட பிரசார இயக்க மாநிலத் தலைவர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்துதமிழ் கட்சி தலைவர் ராம். ரவிக்குமார் கூறும்போது, தமிழ்நாட்டில் வழிபாட்டின் மூலமாக மக்களிடம் ஆன்மிக எழுச்சியை உருவாக்க வேண்டும். பக்தி உடையவர்களை இந்து சக்தியாக ஒருங்கிணைக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஊரிலும் வேல் வழிபாட்டு மன்றங்கள் உருவாக்க வேண்டும். அதர்ம சக்தி அழிந்து தர்ம சக்தி மேலோங்க வேண்டும். இதற்காக அறுபடை முருகன் கோவில்களுக்கும் 27 உயரவேல் வழிபாடு யாத்திரை நடத்தத் திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றது. தற்போது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வந்து பூஜை செய்யப்பட்டது. நாளை (இன்று) பழனி முருகன் கோவிலில்பூஜை செய்யப்படுகிறது. மேலும் மற்ற முருகபெருமானின் படை வீடுகளுக்கும் வேல் வழிபாடு யாத்திரை செல்ல உள்ளோம் தெரிவித்தார்.
Related Tags :
Next Story