போலீசாரால் வழக்கு பதிந்து பறிமுதல் செய்யப்பட்ட 472 வாகனங்களை உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தகவல்

போலீசாரால் வழக்கு பதிந்து பறிமுதல் செய்யப்பட்ட 472 வாகனங்களை உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தகவல்
x
தினத்தந்தி 24 Nov 2021 10:05 PM GMT (Updated: 24 Nov 2021 10:05 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிமை கோரப்படாத 472 வாகனங்களின் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அறிவித்து உள்ளார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிமை கோரப்படாத 472 வாகனங்களின் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அறிவித்து உள்ளார்.
472 வாகனங்கள்
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு நகர குற்றப்பிரிவு, ஈரோடு வடக்கு (வீரப்பன்சத்திரம்), ஈரோடு தெற்கு (சூரம்பட்டி), கருங்கல்பாளையம், தாலுகா, மொடக்குறிச்சி, பவானி, சித்தோடு, கோபி, சிறுவலூர், கவுந்தப்பாடி, திங்களூர், நம்பியூர், கடத்தூர், சத்தியமங்கலம், பங்களாப்புதூர், பவானிசாகர், பெருந்துறை, சென்னிமலை, வெள்ளோடு, அறச்சலூர், கொடுமுடி, சிவகிரி, மலையம்பாளையம் ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் யாரும் உரிமை கோரப்படாத 472 வாகனங்கள் உள்ளன.
பெற்றுக்கொள்ளலாம்
இந்த வாகனங்களின் உரிமையாளர்கள், தங்களிடம் உள்ள உரிய ஆவணங்களை காட்டி வாகனங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை ஈரோடு ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படும்.
வாகனங்களின் உரிமையாளர்கள் நேரில் வந்து பார்வையிட்டு உரிய ஆவணங்களை காட்டி தங்கள் வாகனங்களை பெற்றுச்செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறி உள்ளார்.

Next Story