அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் கனமழையால் வீடு இடிந்து விழுந்தது- 5 பேர் உயிர் தப்பினர்
அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் கனமழையால் வீடு இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினார்கள்.
அந்தியூர்
அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் கனமழையால் வீடு இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினார்கள்.
வீடு இடிந்தது
அந்தியூர், தவுட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. தவுட்டுப்பாளையம் கோவிந்தன் வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய ஓட்டு வீட்டின் சுவர் மழையால் ஈரப்பதமாக இருந்தது.
இதனால் ஈஸ்வரன் மற்றும் அவருடைய குடும்பத்தில் உள்ள 4 பேர் உடனே பக்கத்து வீட்டில் தஞ்சம் அடைந்தார்கள். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் வீடு இடிந்து விழுந்தது. இதனால் அவர்கள் 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
கோரிக்கை மனு
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.
மேலும் அரசின் திட்டத்தில் வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அப்போது தவுட்டுப்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ.வை சந்தித்து சாக்கடை, தெருவிளக்கு, குடிநீர் வசதி கேட்டு கோரிக்கை மனு கொடுத்தார்கள். அந்தியூர் பேரூராட்சி செயல் அதிகாரி ரவி, சுகாதார ஆய்வாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, குணசேகரன் மற்றும் வருவாய்த்துறையினர் அப்போது உடனிருந்தார்கள்.
Related Tags :
Next Story