தூய சவேரியார் தேவாலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


தூய சவேரியார் தேவாலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
x
தினத்தந்தி 25 Nov 2021 10:23 AM IST (Updated: 25 Nov 2021 10:23 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை தூய சவேரியார் தேவாலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லை,

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் தேவாலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னாள் கத்தோலிக்க பிஷப் ஜூடு பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தேவாலயத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. 

முன்னதாக நடைபெற்ற சிறப்பு ஆராதனை நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சப்பர பவனி, வரும் டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேவாலயத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story