247 பவுன் போலி நகைகளை கொடுத்து ரூ.70 லட்சம் மோசடி
247 பவுன் நகைகளை கொடுத்து பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனர்.
மதுரை
247 பவுன் நகைகளை கொடுத்து பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனர்.
ரூ.70 லட்சம் மோசடி
மதுரை ஐராவதநல்லூர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி புவனேசுவரி(வயது 32). இவர்கள் நகை வியாபாரம் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் புவனேசுவரி தெப்பக்குளம் குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த நகை வியாபாரி ஆனந்த்பாபு(35), அவருடைய மனைவி பிரியா (31) ஆகியோர் என்னிடம் நகைகளை கொடுத்து அதற்கு பதிலாக பணம் வாங்கி வந்தனர். இவ்வாறு அவர்கள் மொத்தம் 247 பவுன் வரை நகைகளை கொடுத்து ரூ.70 லட்சம் வரை பணம் பெற்றுள்ளனர். இந்தநிலையில் அவர்கள் கொடுத்த நகைகளை பரிசோதித்து பார்த்தபோது, அவை அனைத்தும் போலி நகைகள் என்பது தெரியவந்தது.
தம்பதி கைது
இதுகுறித்து நான் அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்க மறுப்பு தெரிவித்து, மிரட்டல் விடுத்தனர். எனவே ஏமாற்றிய தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
அதன்பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகை கொடுத்து ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஆனந்த்பாபு, அவருடைய மனைவி பிரியா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story