பஸ் நிறுத்தத்தில் கார் புகுந்து காயம் அடைந்த மாணவி சாவு


பஸ் நிறுத்தத்தில் கார் புகுந்து  காயம் அடைந்த மாணவி சாவு
x
தினத்தந்தி 25 Nov 2021 7:47 PM GMT (Updated: 25 Nov 2021 7:47 PM GMT)

மதுரை அருகே பஸ் நிறுத்தத்தில் கார் புகுந்து காயம் அடைந்த மாணவி பரிதாபமாக இறந்தார்.

ஒத்தக்கடை
மதுரை அருகே பஸ் நிறுத்தத்தில் கார் புகுந்து காயம் அடைந்த மாணவி பரிதாபமாக இறந்தார்.
பஸ் ஏற காத்திருந்த மாணவி
மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிகுமார். இவருடைய மகள் தாரணி (வயது 19). இவர் ஒத்தக்கடை அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 23-ந்தேதி கல்லூரி முடித்து விட்டு பஸ் ஏறுவதற்காக கல்லூரி முன்புள்ள நான்குவழிச்சாலை பஸ் நிறுத்தத்தில் தாரணி நின்று கொண்டிருந்தார்.  அப்போது புதுச்சேரியில் இருந்து திருச்செந்தூர் நோக்கிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிறுத்தத்தில் புகுந்து, அங்கு நின்றிருந்த தாரணி, லாவண்யா, மாணவர் நிதிஷ்குமார் ஆகியோர் மீது மோதியது.
சிகிச்சை பலனின்றி இறப்பு
படுகாயம் அடைந்த அவர்கள் 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த தாரணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தாரணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.  இதனை அறிந்த கல்லூரி மாணவர்கள், ஆஸ்பத்திரி முன்பு திரண்டு அந்த மாணவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கைது
இந்த விபத்து தொடர்பாக ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த ரவிக்குமாரை கைது செய்தனர்.

Next Story