தார்வார் மருத்துவ கல்லூரியில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 66 மாணவர்களுக்கு கொரோனா
தார்வார் மருத்துவ கல்லூரியில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 66 மாணவர்களுக்கு ெகாரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
66 மாணவர்களுக்கு பாதிப்பு
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் ஒரே கல்லூரியில் படித்து வரும் 66 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது தார்வார் டவுனில் எஸ்.டி.எம். மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்டோர் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இங்கு படித்து வரும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 300 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
கல்லூரிக்கு சீல் வைப்பு
மேலும் கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுஉள்ளது. கொரோனா பாதித்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் கல்லூரி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு பிறகே கல்லூரி திறக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள்
இதுகுறித்து தார்வார் மாவட்ட கலெக்டர் நித்தீஸ் பட்டேல் நிருபர்களிடம் கூறியதாவது:-
தார்வாரில் எஸ்.டி.எம். மருத்துவ கல்லூரியில் படித்து வரும் 66 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர்களை கல்லூரியின் 2 தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதுபோல் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மேலும் அந்த கல்லூரியில் உள்ள டாக்டர்கள், ஊழியர்கள், மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story