கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நர்சுகள்
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நர்சுகள்
கோவை
பணிநீட்டிப்பு செய்ய வலியுறுத்தி, கோவை கலெக்டர் அலுவலகத்தை நர்சுகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
கோவை மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதன்படி மாவட்ட நிர்வாகம் சார்பில், கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 6 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நர்சுகள் உள்பட மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.14,000 ஊதியமாக வழங்கப்பட்டது.
இவர்களது பணிக் காலம் வருகிற ஜனவரி மாதம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், அவர்களை திடீரென்று பணியில் இருந்து விடுவித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி யில் பணியாற்றிய நர்சு உள்பட மருத்துவ பணியாளர்கள் நேற்று காலை கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மருத்துவ சேவை
அவர்கள், தங்களுக்கு பணிநீட்டிப்பு வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது
கொரோனா காலத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேர்காணல் நடத்தப்பட்டு, 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் கடந்த ஆகஸ்டு மாதம் 69 பேர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பணிக்கு சேர்ந்தோம்.
முதலில் உணவு, தங்கும் இடம் தரப்பட்டது. சில நாட்களில் உணவு வினியோகம் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே இந்த மாதத்தில் இருந்து பணியில் இருந்து நின்று கொள்ளுமாறு எங்களுக்கு, குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.
கொரோனா காலங்களில் உயிரை பணயம் வைத்து நாங்கள் மருத்துவ சேவை ஆற்றினோம்.
பணி நீட்டிப்பு வேண்டும்
கோவையில் தற்போது வரை தினசரி 100 பேர் வரை கொரோனா வால் பாதிக்கப்படுகின்றனர். டெங்கு பாதிப்பும் அதிகரித்து வருகிறது.
எனவே எங்களுக்கு ஒப்பந்த காலம் முடியும் வரை இ.எஸ்.ஐ. ஆஸ்பத் திரி அல்லது மாவட்டத்தில் உள்ள வேறு ஏதாவது ஆஸ்பத்திரியில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.
மேலும் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் பணி நீட்டிப்பு செய்வது குறித்து பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story