நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்


நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 26 Nov 2021 9:15 PM IST (Updated: 26 Nov 2021 9:15 PM IST)
t-max-icont-min-icon

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

கோவை

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடந்தது. 

இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாய அமைப்புகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு  கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

கூட்டத்தில் கட்சி சார்பற்ற விவசாய சங்க தலைவர் கந்தசாமி

அன்னூர் ஓட்டர்பாளையம் சம்பவத்தில் விவசாயி மீது போடப்பட்ட பி.சி.ஆர். வழக்கை திரும்ப பெற வேண்டும். 

சிங்காநல்லூர் குளம் மற்றும் சூலூர் ஆச்சன்குளத்திற்கு செல்லும் கழிவுநீரை சுத்திகரித்து விட வேண்டும். 

தடாகம் பகுதியில் விவசாய நிலங்களில் மின் மோட்டார், ஒயர்கள் அடிக்கடி திருடு போகின்றன. 

அதுகுறித்து புகார் செய்தால் தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்வதில்லை. எனவே மின் மோட்டார் திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும். 

கோவை மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்மார்ட் கார்டு 

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு தலைவர் பழனிசாமி:-
தென்னை மரத்தில் இருந்து 42 பொருட்கள் மதிப்பு கூட்டு முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

தற்போது பசுமை தீர்ப்பாயம் மூலம் அந்த தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. 

எனவே விவசாய நிலம், நீர் பாதிக்காத வகையில் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தென்னை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.

மழைநீரை வீணாகாமல் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர் சந்தைகளில் வழங்கப்படும் அடையாள அட் டைகளை ஸ்மார்ட் கார்டு போல் மாற்றி தர வேண்டும். 

அப்போது தான் இடைத்தரகர்களின் நடமாட்டத்தை குறைக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உர தட்டுப்பாடு

விவசாயிகள் சிலர் கூறுகையில், துடியலூரில் இருந்து அசோகபுரம் வரை உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.

 கோவை வேளாண் பல்கலைக்கழகம் முன்பு இருந்த ஏ.டி.எம். விதை விற்பனை எந்திரத்தை மீண்டும் வைக்க வேண்டும். 

உர தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். சின்னவேடம்பட்டி குளத்திற்கு தண்ணீர் வரும் ராஜவாய்க்காலில் மேட்டுப்பாளையம் சாலை ஆஞ்சநேயர் கோவில், வெள்ளக்கிணறு ஆகிய இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றனர்.

கிணத்துக்கடவு தாலுகா விவசாயிகள் கொடுத்த மனுவில், சொக்கனூர் பகுதியில் விவசாய நிலங்களில் தாது மணல் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


Next Story