ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு


ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு
x
ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு
தினத்தந்தி 26 Nov 2021 9:15 PM IST (Updated: 26 Nov 2021 9:15 PM IST)
t-max-icont-min-icon

ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் 27 வயது பெண். இவருக்கும் சென்னை மாநகரில் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வரும் நேசமணி என்பவருக்கும் இடையே முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து சுமார் 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதை அறிந்த போலீஸ்காரர் நேசமணி என்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டாய். எனவே இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளார்.

மேலும் காதலிக்கும் போது அந்த பெண்ணுடன் எடுத்த புகைப்படங்களை நேசமணி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த அந்த பெண் பொள்ளாச்சி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

இந்த புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் தான் காதலிக்கவில்லை என்றும், தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மிரட்டுகிறார் என்று கூறி உள்ளார். 

இதையடுத்து மகளிர் போலீசார் நேசமணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை பிடிப்பதற்கு சென்னைக்கு தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர்.

Next Story