திருவள்ளூரை அடுத்த காக்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு
திருவள்ளூரை அடுத்த காக்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளிடையே நடத்தப்பட்ட தனித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 60 மாணவ- மாணவிகளுக்கு சத்தான உணவு, உடை, கட்டில், மெத்தை உள்ளிட்ட தங்குமிட வசதிகளுடன் சூப்பர்-30 திட்டத்தின் மூலமாக 12-ம் வகுப்பு பாடத்திட்டம் மற்றும் உயர்கல்விக்கான வழிகாட்டுதலுடன் சிறப்பு பயிற்சி (நீட், ஜே.இ) உள்ளிட்ட பல்வேறு நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதை திருவள்ளூரை அடுத்த காக்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பயிலும் மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடிய கலெக்டர் ஒரு மாணவனை அழைத்து கரும்பலகையில் கணக்கு தொடர்பான விவரங்களை எழுதுமாறு கூறினார். அப்போது அவருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மலர்கொடி, ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகேயன், பாலகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story