தொழிலாளி உயிருடன் மீட்பு


தொழிலாளி உயிருடன் மீட்பு
x
தொழிலாளி உயிருடன் மீட்பு
தினத்தந்தி 26 Nov 2021 9:29 PM IST (Updated: 26 Nov 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி உயிருடன் மீட்பு

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள தாவளம் வழியாக கோரையாறு செல்கிறது. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் குளிக்க சென்ற ஒருவர் ஆற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டார். இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த தகவலின் பேரில் நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு கவச உடை அணிந்து கொண்டு ஆற்று வெள்ளத்தில் நீந்தி சென்றனர். 

இதையடுத்து கயிறு மூலம் அவரை கட்டிக் கொண்டு சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக உயிருடன் மீட்டு வந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில் சேலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 24) என்பதும், நண்பர்களுடன் கோபாலபுரத்தில் தங்கி வேலை பார்க்க வந்தது தெரியவந்தது.


Next Story