லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
பொள்ளாச்சி
ஆனைமலை அருகே வேட்டைக்காரன்புதூர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னகாமணன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் 2 பேர் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 52), உதயகுமார் (50) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 163 லாட்டரி சீட்டுக்கள், ரூ.520 பறிமுதல் செய்யப்பட்டது.
----
Reporter : V.MURUGESAN_Staff Reporter Location : Coimbatore - Pollachi - POLLACHI
Related Tags :
Next Story