கொடைக்கானலில் உலா வந்த காட்டெருமை


கொடைக்கானலில் உலா வந்த காட்டெருமை
x
தினத்தந்தி 26 Nov 2021 10:29 PM IST (Updated: 26 Nov 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டெருமை ஒன்று உலா வந்ததால் சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓடினர்.

கொடைக்கானல்: 

‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் உள்ளன. அவை அடிக்கடி நகர்ப்பகுதிக்குள் புகுந்து பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் கே.ஆர்.ஆர். கலையரங்கம் அருகே அப்சர்வேட்டரி சாலையில் காட்டெருமை ஒன்று உலா வந்தது. இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சாலையின் ஓரமாக நிறுத்தினார். சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். 

பலர் ஆபத்தை உணராமல் காட்டெருமையை புகைப்படம் எடுத்தனர். தகவலறிந்து அங்கு வனத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அந்த காட்டெருமையை கான்வென்ட் ரோடு வழியாக தனியார் தோட்ட பகுதிக்குள் விரட்டினர். அடிக்கடி உலா வரும் காட்டெருமைகளை கொடைக்கானல் நகர் பகுதியில் புகுவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  


Next Story