ஓவியம்,பரதம், குரலிசை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்


ஓவியம்,பரதம், குரலிசை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 26 Nov 2021 10:48 PM IST (Updated: 26 Nov 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

கலை பண்பாட்டுத்துறையின் மூலம் ஓவியம்,பரதம், குரலிசை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை, 
கலை பண்பாட்டுத்துறையின் மூலம் ஓவியம்,பரதம், குரலிசை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தின் மூலமாக ஓவியம், பரதம், குரலிசை, கிராமிய நடனம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக ஜவகர் சிறுவர் மன்றத்தில் நடைபெற்ற இந்த பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது அரசின் அனுமதியை தொடர்ந்து மீண்டும் வழக்கம்போல தொடங்க உள்ளது.
பயிற்சி
 இந்த பயிற்சிகள் சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணிவரையும் ஞாயிற்றுக்கிழமை  மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.  சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த பயிற்சியில் விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் சேர்ந்து பயிற்சி பெறலாம் தகவலை கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story