தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு 7 மணி நேரம் தாமதமாக வந்த ரெயில்கள்
மழை, வெள்ளம் காரணமாக தூத்துக்குடியில் இருந்து சென்னை, மைசூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேற்று முன்தினம் வருவதற்கு பதிலாக சுமார் 7 மணி நேரம் தாமதமாக நேற்று அதிகாலை மதுரை ரெயில் நிலையம் வந்து சேர்ந்தன.
மதுரை, நவ.27-
மழை, வெள்ளம் காரணமாக தூத்துக்குடியில் இருந்து சென்னை, மைசூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேற்று முன்தினம் வருவதற்கு பதிலாக சுமார் 7 மணி நேரம் தாமதமாக நேற்று அதிகாலை மதுரை ரெயில் நிலையம் வந்து சேர்ந்தன.
தூத்துக்குடி
தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி ரெயில் நிலையத்தை மழைநீர் வெள்ளம் போல சூழ்ந்துள்ளது. அதனை தொடர்ந்து, தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக மைசூரு மற்றும் சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், பயணிகளின் போக்குவரத்து தடைபடக்கூடாது என்பதற்காக கோட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, என்ஜினீயரிங், இயக்கம், வர்த்தப்பிரிவு ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் இரவு, பகலாக ரெயில்களை தொடர்ந்து இயக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
7 மணி நேரம் தாமதம்
இந்த நிலையில், நேற்று முன்தினம் தூத்துக்குடியில் இருந்து மாலை 5.15 மணிக்கு மைசூரு புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக இயக்கப்பட்டது. இதையடுத்து, இந்த ரெயில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பதிலாக சுமார் 7 மணி நேரம் தாமதமாக நேற்று அதிகாலை 3 மணிக்கு மதுரை ரெயில்நிலையம் வந்தது. அதனை தொடர்ந்து, இரவு 8.15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை புறப்பட வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதமாக புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பதிலாக நேற்று காலை 6 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைந்தது.
இந்த பிரச்சினை காரணமாக, நேற்று மாலையில் மேற்கண்ட 2 ரெயில்களும் நெல்லையில் பராமரிப்பு பணி முடிக்கப்பட்டு மீளவிட்டான் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்பட்டு மதுரை வழியாக அந்தந்த பகுதிக்கு செல்லும்படி இயக்கப்பட்டன. இதனால், இந்த ரெயில்களில் முன்பதிவு செய்த பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
Related Tags :
Next Story