மதுரை விமான நிலையத்தில் நர்சு கைது


மதுரை விமான நிலையத்தில் நர்சு கைது
x
தினத்தந்தி 26 Nov 2021 8:06 PM GMT (Updated: 26 Nov 2021 8:06 PM GMT)

மதுரை விமான நிலையத்தில் நர்சு கைது

மதுரை
துபாயில் இருந்து மதுரைக்கு ஒரு தனியார் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடமைகளை மதுரை விமான நிலைய குடியேற்றத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, குமரி மாவட்டம் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது மகள் நந்தினி(வயது 28) வந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருடைய பாஸ்போர்ட்டை குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், கடந்த 2019-ம் வருடம் திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் துபாய்க்கு சென்ற நந்தினி அங்கிருந்து, ஏமன் நாட்டிற்கு சென்று அங்கு நர்சாக வேலை செய்தது தெரியவந்தது. மத்திய அரசின் கட்டுப்பாடுகள், விதிமுறைகளின்படி ஏமன் நாட்டிற்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசின் இந்த தடையை மீறி கள்ளத்தனமாக நந்தினி ஏமன் நாட்டிற்கு சென்றதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

Next Story