மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை
மக்கள் நலன் கருதி 1200-க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர்களின் பணிநேரம் குறித்த அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும், மருந்துகளை முறையாக பராமரித்து குளிர்பதன வசதியுடன் கூடிய மருந்து கிடங்குகளை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் மதுரை மாநகர், புறநகர் மாவட்ட குழு சார்பில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர்கள் ரத்தினசாமி, சோம சேகர் தலைமை தாங்கினர். மாவட்ட அமைப்பு செயலாளர்கள் சரவணகுமார், கலையரசி ஆகியோர் வரவேற்று பேசினர். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர்கள் பாஸ்கரன், தமிழ்ச்செல்வி பேசினர். மாநிலச் செயலாளர் முருகன் சிறப்புரையாற்றினார். முன்னாள் மாநில பொதுச்செயலாளர்கள் தேவேந்திரன், பால்முருகன், மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் நீதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story