சாலையில் செடிகளை நட்டு போராட்டம்
சாலையில் செடிகளை நட்டு போராட்டம்
மதுரை
மதுரையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பாக்கியநாதபுரம், களத்துப்பொட்டல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை நீர் தேங்கி வருவதால் பொதுமக்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமலும், கொசுத்தொல்லை அதிகரிக்கிறது, இதனால் மழைக்காலங்களில் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் அப்பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் மாநகராட்சி நிர்வாகம் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என்று மாதர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் சித்ரா தலைமையில் செடிகள் நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் சாலை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் கேட்டு கோஷமிட்டனர். இதில் மாவட்ட செயலாளர் சசிகலா உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story