ரூ.29 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
மதுரை விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
மதுரை
கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் மதுரையில் இருந்து இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மதுரையில் இருந்து இலங்கைக்கு செல்லும் விமானத்தில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக மதுரை விமான நிலைய சுங்கப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுரையில் இருந்து இலங்கை செல்லும் பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 2 ஆண் பயணிகள் அணிந்திருந்த செருப்புகள் வித்தியாசமாக இருப்பதை அதிகாரிகள் கண்டனர். அதனை தனியாக சோதனை பார்த்தபோது அவைகளில் அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் பயன்படுத்தும் பண கட்டுகள் இருந்தது.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த 2 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
மதுரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணத்தின் இந்திய மதிப்பு ரூ.29 லட்சத்து 38 ஆயிரத்து 907 இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story