ஈரோட்டில் பலத்த மழை- ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது


ஈரோட்டில் பலத்த மழை- ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது
x
தினத்தந்தி 26 Nov 2021 8:50 PM GMT (Updated: 26 Nov 2021 8:50 PM GMT)

ஈரோட்டில் பலத்த மழை பெய்ததால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஈரோடு
ஈரோட்டில் பலத்த மழை பெய்ததால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பரவலாக மழை
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோட்டில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து லேசான தூறலுடன் மழை தொடங்கியது. பின்னர் இரவு 8 மணியில் இருந்து மழை வலுக்க தொடங்கியது. நள்ளிரவில் மழை சற்று மிதமாக அடித்தது. காலை வரை இந்த மழை நீடித்தது.
இதனால் சாலைகளில் தண்ணீர் ஓடியது. பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடை கால்வாய்களில் மழை நீர் ஓடையாக சென்றது. பாதாள சாக்கடை தொட்டிகளில் இருந்து கழிவுகள் பெருக்கெடுத்து சாலைகளில் கழிவு நீர் ஓடியது.
மழை அளவு
நேற்று காலை முதல் ஈரோட்டில் மேகம் மூட்டமாக இருந்தது. காலையில் லேசான மழைத்தூறலும், பனிமூட்டமுமாக இருந்தது. மாலைவரை எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற நிலையில் வானம் இருண்டு காணப்பட்டது.
நேற்று காலை நிலவரப்படி, ஈரோடு மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
குண்டேரிபள்ளம் - 34.6
கொடுமுடி - 31.6
ஈரோடு - 20
மொடக்குறிச்சி - 20
பெருந்துறை - 18.5
பவானி - 15.2
சென்னிமலை - 14
சத்தியமங்கலம் - 13.4
கவுந்தப்பாடி - 13.2
அம்மாபேட்டை - 10.2
கோபி - 9.4
பவானிசாகர் - 8.4
கொடிவேரி - 8
நம்பியூர் - 6
மேற்கண்டவாறு மழை அளவு பதிவாகி இருந்தது.
ஈரோட்டில் பல நாட்களுக்கு பிறகு 20 மி.மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டேரி பள்ளத்தில் 34.6 மி.மீட்டர் மழை பதிவானது.

Next Story