தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்- மக்காச்சோள பயிர் சேதம்


தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்- மக்காச்சோள பயிர் சேதம்
x
தினத்தந்தி 27 Nov 2021 2:21 AM IST (Updated: 27 Nov 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் மக்காச்சோள பயிரை சேதப்படுத்தின.

தாளவாடி
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் மக்காச்சோள பயிரை சேதப்படுத்தின.
மக்காச்சோள பயிர்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. யானைகள், காட்டுப்பன்றிகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகே உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதேவா (வயது 55). இவரது வீட்டையொட்டி தோட்டம் உள்ளது. இங்குள்ள மானாவாரி நிலத்தில் அவர் 4 ஏக்கர் மக்காச்சோளம் பயிர் செய்துள்ளார்.
சேதம்
இந்த நிலையில் மாதேவா நேற்று காலை தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது மக்காச்சோள பயிர் நாசப்படுத்தப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார்.
நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து கூட்டமாக வந்த காட்டுப்பன்றிகள், மக்காச்சோள தோட்டத்துக்குள் புகுந்துள்ளன. பின்னர் பயிரை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியுள்ளன. இதில் 1 ஏக்கர் பரப்பளவிலான மக்காச்சோள பயிர் சேதமானது. மேலும் இதுபற்றி மாதேவா ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். 


Next Story