கோவையில் 113 பேருக்கு கொரோனா


கோவையில் 113 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Nov 2021 3:08 AM IST (Updated: 27 Nov 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் 113 பேருக்கு கொரோனா

கோவை

கோவை மாவட்டத்தில் நேற்று 113 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 49 ஆயிரத்து 742 ஆக உயர்ந்தது.

 அதே போன்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவார் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று ஒரேநாளில் 111 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி 2 லட்சத்து 46 ஆயிரத்து 27 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 41 வயது பெண், 80 மற்றும் 85 வயது உடைய முதியவர்கள் என மொத்தம் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

இதனால் மாவட்டம் முழுவதும் இதுவரை 2,461 பேர் தொற்று பாதிப்பால் இறந்து உள்ளனர். தற்போது 1,254 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story