1235 விவசாயிகளுக்கு புதிதாக இலவச மின்‌ இணைப்பு


1235 விவசாயிகளுக்கு புதிதாக இலவச மின்‌ இணைப்பு
x
தினத்தந்தி 27 Nov 2021 2:16 PM GMT (Updated: 27 Nov 2021 2:16 PM GMT)

1235 விவசாயிகளுக்கு புதிதாக இலவச மின்‌ இணைப்பு


கோவை

கோவை மாவட்டத்தில் இதுவரை 1,235 விவசாயிகளுக்கு புதிதாக இலவச மின்‌ இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இலவச மின் இணைப்பு

வேளாண் துறையின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை  தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

 அந்த வகையில்  ரூ.5 ஆயிரத்து 25 கோடி மதிப்பீட்டில்‌ புதிதாக ஒரு லட்சம்‌ விவசாய மின்‌ இணைப்புகள்‌ வழங்கும்‌ திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 


அந்த திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 6,363 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

அதில், இதுவரை 1,235 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், உணவு உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  உற்பத்தி பரப்பு, உணவு தானிய உற்பத்தி அதிகமாக வாய்ப்பு உள்ளது என்றனர்.

 வருமானம் அதிகரிக்கும்

இது குறித்து நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த விவசாயி சிவகுமார் கூறுகையில், எனக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 

அதற்கு மின் இணைப்புக்காக விண்ணப்பித்து பல ஆண்டுகள் ஆகியும் மின் இணைப்பு கிடைக்கவில்லை.

 இதனால் ஜெனரேட்டர் மூலமாக மோட்டாரை இயக்கியதால் அதிக செலவு ஏற்பட்டது. 1.5 ஏக்கரில் மட்டும் விவசாயம் செய்தேன்.

 தற்போது இலவச மின் இணைப்பு திட்டத்தில் எனக்கு மின் இணைப்பு கிடைத்துள்ளது. 

இதனால் 3 ஏக்கரிலும் காய்கறி, பூக்கள் சாகுபடி செய்யும் போது வருமானம் அதிகரிக்கும் என்றார்.


Next Story