செல்போன் கடையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
செல்போன் கடையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
கோவை
மாவோயிஸ்டுகள் சிம்கார்டு வாங்கியசெல்போன் கடையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் கைது
கோவையில் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக இடையர்பாளையத்தில் பல் மருத்துவமனை நடத்திய டாக்டர் தினேஷ் மற்றும் சுங்கம் பகுதியை சேர்ந்த டேனிஷ் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
பின்னர் அவர்களி டம் விசாரணை நடத்தி சிறை யில் அடைத்தனர். கோவை புலியகுளத்தில் உள்ள தினேஷின் வீடு, மருத்துவமனை, சுங்கத்தில் உள்ள டேனிஷ் வீடு ஆகிய இடங்களிலும்அதி காரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
செல்போன் கடையில் சோதனை
இந்த நிலையில் கேரளாவில் மாவோயிஸ்டு ஒருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
மேலும் அவர் வைத்திருந்த செல்போனை ஆய்வு செய்தனர். இதில், மாவோயிஸ்டுகள் பயன்படுத்திய செல்போன் சிம்கார்டு கோவையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை கோவை வெள்ளலூர் இடையர் பாளையத்தில் உள்ள சந்தோஷ் என்பவரின் செல்போன் கடையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினார்கள்.
மாவோயிஸ்டுகளுக்கு சிம்கார்டு கொடுத்தது எப்படி? எந்த முகவரியை கொடுத்து வாங்கினார்கள்? என பல கோணங்களில் விசாரணை நடத்தினார்கள்.
ஆவணங்கள் பறிமுதல்
அப்போது, மாவோயிஸ்டுகள் கொடுத்ததாக கூறப்படும் முகவரியை கடைக்காரரிடம் அதிகாரிகள் வாங்கி விசாரித்தனர்.
இதில், அந்த முகவரி போலியானது என்பது தெரியவந்தது. மேலும் அந்த முகவரியில் இருந்த பெயிண்டர் நாகராஜ் என்பவரிடம் விசாரணை நடைபெற்றது.
அவர் தனக்கு எதுவும் தெரியாது என்றும், தனது முகவரியை பயன்படுத்தி யாராவது வாங்கி இருக்கலாம் என்றும் கூறினார்.
இது போன்று மாவோயிஸ்டுகள் யார்? யாருக்கு சிம்கார்டு கொடுக்கப் பட்டது என்று செல்போன் கடை உரிமையாளரிடம் அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
இதையடுத்து சிம்கார்டு வாங்க வாடிக்கையாளர் கொடுத்த முகவரி சான்று ஆவணங்களை செல்போன் கடையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story