மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் சாவு


மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் சாவு
x
மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் சாவு
தினத்தந்தி 27 Nov 2021 9:20 PM IST (Updated: 27 Nov 2021 9:20 PM IST)
t-max-icont-min-icon

மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் சாவு

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டியை சேர்ந்தவர் ஜேசன் (வயது 43). தனியார் நிறுவன மேலாளர். இவரது மகன் ஜெரின் ஜேசன் (16). இவர் புளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஜெரின் ஜேசன் வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் சம்பவத்தன்று ஜெரினுக்கு காய்ச்சல் ஏற்பட்டு நள்ளிரவில் மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு   பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்தனர்.

ஆனால் வழியிலேயே ஜெரின்  பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோமங்கலம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு இறந்தது தெரியவந்தது. ஜெரினின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்பிற்கான முழு விவரமும் தெரியவரும்  எனறு அதிகாரிகள் தெரிவித்தனர்.



Next Story