கோதவாடி குளத்தில் 2ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டது


கோதவாடி குளத்தில் 2ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டது
x
கோதவாடி குளத்தில் 2ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டது
தினத்தந்தி 27 Nov 2021 4:19 PM GMT (Updated: 27 Nov 2021 4:19 PM GMT)

கோதவாடி குளத்தில் 2ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டது

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளத்திற்கு தற்போது பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் உபரிநீர் வழங்கப்பட்டுள்ளது. இந்த குளத்தில் 11 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கிவைக்க முடியும். தற்போது கோதவாடி குளத்தில் 2 மில்லியன் கன அடிக்கு மேல் வந்துள்ளது.

கோதவாடி குளத்தில் தேங்கியுள்ள தண்ணீரை காண்பதற்கு கோதவாடி குளக்கரையை சுற்றி உள்ள சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள், விவசாயிகள் தினசரி வந்து பார்வையிட்டு செல்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கோதவாடி குளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் விதவிதமான பறவைகள் கோதவாடி குளத்திற்கு வர தொடங்கியுள்ளது.

இந்த குளத்தில் கோதவாடியை சேர்ந்த கார்த்தி என்ற விவசாயி ஆழியார் மீன் பண்ணையில் இருந்து 2 ஆயிரம் மீன்குஞ்சுகளை வாங்கினார். பின்னர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில்மீன்குஞ்சுகள் கோதவாடி குளத்தில் விடப்பட்டது.

Next Story