காணாமல் போன 84 செல்போன்கள் மீட்பு


காணாமல் போன 84 செல்போன்கள் மீட்பு
x
தினத்தந்தி 28 Nov 2021 12:49 AM IST (Updated: 28 Nov 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

காணாமல் போன 84 செல்போன்கள் மீட்பு

மதுரை
மதுரையில் பஸ் மற்றும் வாகனங்களில் செல்லும் போது காணாமல் மற்றும் திருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடித்து தருமாறு ஏராளமான புகார்கள் போலீஸ் நிலையத்திற்கு வருகின்றன. அவ்வாறு தொலைந்த செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த்சின்கா போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் செல்போன்களை கண்டு பிடிக்க தனிப்படை அமைத்தும், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அதன் அடிப்படையில் நகரில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதியப்பட்ட புகாரின் அடிப்படையில் நேற்று மொத்தம் 84 செல்போன்கள் மீட்கப்பட்டன. அதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதூர் போலீஸ் நிலையத்தில் நேற்று மாலை நடந்தது. அதில் போலீஸ் துணை கமிஷனர் ராஜசேகரன் கலந்து கொண்டு உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.இந்த நிகழ்ச்சியில் போலீஸ் உதவி கமிஷனர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரபிரகாஷ், பதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் துரைப்பாண்டியன், வசந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story