பாதாள சாக்கடையில் விழுந்து என்ஜினீயர் பலி


பாதாள சாக்கடையில் விழுந்து என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 28 Nov 2021 12:49 AM IST (Updated: 28 Nov 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

மதுரை பாதாள சாக்கடையில் விழுந்து என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.

மதுரை
மதுரை பாதாள சாக்கடையில் விழுந்து என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
பாதாள சாக்கடையில் பிணம்
மதுரை பை-பாஸ் ரோடு பசும்பொன் நகர் போடி லயன் ெரயில்வே தடுப்பு சுவர் அருகே பாதாள சாக்கடையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே சுப்பிரமணியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தொட்டியில் இருந்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
இறந்தவர் குறித்து விசாரித்த போது பை-பாஸ் ரோடு நேரு நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் ரெங்கசாமியின் மகன் ஜெகநாதபாண்டியன் (வயது 33) என்பதும், என்ஜினீயரிங் முடித்துள்ள அவர் வேலை தேடி வந்ததும் தெரியவந்தது. 
வழக்குப்பதிவு
இரவில் அவர் அந்த வழியாக வீட்டிற்கு சென்றபோது தவறி, மூடப்படாத அந்த சாக்கடை தொட்டிக்குள் விழுந்து இறந்திருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1 More update

Next Story