துப்பாக்கியை சுத்தம் செய்தபோது குண்டு பாய்ந்து அதிரடிப்படை வீரர் படுகாயம்; சத்தியமங்கலம் அருகே பரபரப்பு


துப்பாக்கியை சுத்தம் செய்தபோது குண்டு பாய்ந்து அதிரடிப்படை வீரர் படுகாயம்; சத்தியமங்கலம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 28 Nov 2021 2:14 AM IST (Updated: 28 Nov 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே துப்பாக்கியை சுத்தம் செய்தபோது குண்டு பாய்ந்து அதிரடிப்படை வீரர் படுகாயமடைந்தார்.

புஞ்சைபுளியம்பட்டி
சத்தியமங்கலம் அருகே துப்பாக்கியை சுத்தம் செய்தபோது குண்டு பாய்ந்து அதிரடிப்படை வீரர் படுகாயமடைந்தார். 
குண்டு பாய்ந்தது
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 34). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள குய்யனூரில் செயல்படும் நக்சல் தடுப்பு பிரிவில் அதிரடிப்படை வீரராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு சந்தோஷ் தன்னுடைய துப்பாக்கியை சுத்தம் செய்துகொண்டு இருந்தார். அப்போது திடீரென துப்பாக்கி வெடித்தது. அதில் இருந்து 2 குண்டுகள் சந்தோஷின் காலில் பாய்ந்தது. இதனால் அவர் அலறி துடித்தார். 
சத்தம் கேட்டு ஓடிவந்த மற்ற வீரர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். 
விசாரணை
பின்னர் சத்தோஷின் கால்களில் உள்ள குண்டுகளை அகற்ற வேண்டியிருந்ததால் உடனே கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்குள்ள டாக்டர்கள் நவீன அறுவை சிகிச்சை மூலம் சந்தோஷின் கால்களில் இருந்த 2 குண்டுகளையும் அகற்றினார்கள். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளார்கள். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து அதிரடிப்படை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story