வீட்டு வசதிவாரிய மனை, வீடுகளுக்கு முழு தொகை செலுத்தியவர்களுக்கு கிரைய பத்திரம்; செயற்பொறியாளர் வழங்கினார்
வீட்டுவசதி வாரிய மனைகளுக்கு முழு தொகை செலுத்தியவர்களுக்கு கிரைய பத்திரங்களை செயற்பொறியாளர் வழங்கினார்.
ஈரோடு
வீட்டுவசதி வாரிய மனைகளுக்கு முழு தொகை செலுத்தியவர்களுக்கு கிரைய பத்திரங்களை செயற்பொறியாளர் வழங்கினார்.
அமைச்சர் உத்தரவு
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் மாவட்டங்கள் தோறும் வீடுகள், வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த மனைகள் மற்றும் வீடுகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒதுக்கீடு பெற்றவர்கள் உரிய தொகை செலுத்தினாலும் கிரைய பத்திரங்கள் பெறுவதில் சிரமம் ஏற்படுவதாக புகார்கள் இருந்தன. இந்தநிலையில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு முகாம்கள் அமைத்து தகுதியான அனைவருக்கும் கிரைய பத்திரங்கள் வழங்க உத்தரவிட்டார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இதுபோல் ஈரோடு மாவட்ட வீட்டு வசதி பிரிவு சார்பில் 3-வது சிறப்பு முகாம் சம்பத்நகரில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலக செயற்பொறியாளரும் நிர்வாக அதிகாரியுமான கரிகாலன் தலைமை தாங்கினார்.
2 நாட்கள்
ஈரோடு முத்தம்பாளையத்தில் உள்ள வீட்டு வசதி திட்டங்கள், நசியனூர் ரோடு, பெருந்துறை, தாராபுரம், பள்ளிபாளையம் என்று வீட்டுவசதி திட்டப்பகுதிகளில் வீடுகள், மனைகள் ஒதுக்கீடு பெற்று முழு தொகையும் செலுத்திய பலரும் முகாமில் கலந்து கொண்டனர். அவர்கள் வழங்க வேண்டிய உறுதிமொழி பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு சரிபார்த்தனர். வரைவு கிரைய பத்திரம் மற்றும் கிரைய பத்திரங்களை செயற்பொறியாளர் கரிகாலன் வழங்கினார்.. முகாமில் கண்காணிப்பாளர் பிரபாவதி, உதவி வருவாய் அதிகாரி (பொறுப்பு) ஜெ.பிரியா, உதவி பொறியாளர் ராமநாதன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
முகாம் 29 (திங்கட்கிழமை), 30 (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளன. எனவே வீடு, வீட்டு மனைகள் ஒதுக்கீடு பெற்று முழு தொகை செலுத்த வேண்டியவர்கள், ஆவணங்கள் ஒப்படைக்க வேண்டியவர்கள் இந்த முகாமை பயன்படுத்தி விரைவாக கிரைய பத்திரங்களை பெற்றுக்கொள்ள அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
Related Tags :
Next Story