ஒரத்தூர் ஏரிகரை உடைந்து தண்ணீர் வெளியேற்றம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


ஒரத்தூர் ஏரிகரை உடைந்து தண்ணீர் வெளியேற்றம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 Nov 2021 5:06 PM IST (Updated: 28 Nov 2021 5:06 PM IST)
t-max-icont-min-icon

ஒரத்தூர் ஏரியில் நீர்தேக்கத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஒரத்தூர் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணியின் கீழ் ஒரத்தூர் ஆற்றின் குறுக்கே ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்தேக்கம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி முழுமையாக முடிவடையாமல் உள்ளது. மழை நீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க இந்த நீர்தேக்கம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த மழையால் நீர்த்தேகத்தின் கரையில் உடைப்பு ஏற்பட்டது. அப்போது மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து கரை சீரமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்துவரும் தொடர் மழையால் நீர்த்தேக்கம் பகுதியில் மறுபடியும் உடைப்பு ஏற்பட்டு அதிக அளவு நீர் வெளியேறி வருகிறது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்.

ஏரியின் கரை ஏற்கனவே உடைந்தபோது மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து கரை சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக மறுபடியும் நீர்தேக்க பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Next Story