3-ம் கட்ட வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்


3-ம் கட்ட வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்
x
3-ம் கட்ட வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்
தினத்தந்தி 28 Nov 2021 8:28 PM IST (Updated: 28 Nov 2021 8:28 PM IST)
t-max-icont-min-icon

3-ம் கட்ட வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந்தேதி பொதுமக்கள், அரசியல் கட்சியின் அறிந்துகொள்ளும் வகையில்வெளியிடப்பட்டது.இதனை தொடர்ந்து,
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் நடந்தது. 

நேற்று 3-வது கட்டமாக  பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 269 வாக்குச்சாவடிகளில் முகாம்கள் நடைபெற்றன. இம்முகாம்கள் காலை முதல் மாலை மணி வரை நடைபெற்றது.
அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடந்த சிறப்பு முகாமில் பெயர் சேர்க்கபடிவம்-6, பெயர் நீக்கத்துக்கு படிவம்-7, வாக்காளர் அட்டையில் திருத்தத்துக்கு படிவம், 8-ம் பூர்த்தி செய்து வழங்க பலர்ஆர்வம் காட்டினர்.
தொகுதிக்குள் முகவரி மாற்றத்துக்கு படிவம், 8-ஏ விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து பலர் அலுவலர்களிடம்வழங்கினர். பலர் தங்களது பெயர் உள்ளதா ? என்று ஆர்வத்துடன் பட்டியலை பார்வையிட்டனர்.

 ஏராளமானவிண்ணப்பங்கள் பெறப்பட்டன. தகுதி உடையவர்களை தி.மு.க., அ.தி.முக., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சிஉள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சியினர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க மிகவும் ஆர்வம் காட்டினர்.

Next Story