தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
ஒளிராத தெருவிளக்குகள்
ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் தெருவிளக்குகள் சரியாக ஒளிர வில்லை. இதனால் இரவு நேரத்தில் வேலை முடிந்து செல்ப வர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மனித-விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, தெருவிளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துசாமி, பெர்ன்ஹில், ஊட்டி.
சுகாதார சீர்கேடு
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட கழிப்பிடங்கள் பராமரிப்பின்றி சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் நிலை காணப்படுகிறது. அதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. ஆகவே, கழிப்பிடங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
பரிமளா, காந்தல்.
காட்டுப்பன்றிகள் கூடாரமான கழிவறை
கோத்தகிரி புதிய நூலகத்திற்கு அருகே புதிதாக கழிப்பிடம் கட்டப்பட்டு உள்ளது. இதனால் அருகில் பயனற்ற நிலையில் இருந்த பழைய கழிவறையை இடித்து அகற்றவில்லை. இதனால் இந்த கழிவறை தற்போது காட்டுப்பன்றிகள் கூடாரமாக மாறிவிட்டது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே காட்டுப்பன்றிகள் கூடாரமான அந்த பயனற்ற கழிவறையை அகற்ற வேண்டும்.
தனசேகரன், கோத்தகிரி.
வீதியை ஆக்கிரமித்த தெருநாய்கள்
கோவை 90-வது வார்டு கோவைப்புதூர் பெருமாள் கோவில் பின்புறம் உள்ள வீதியில் தெருநாய்கள் கூட்டங்கூட்டமாக சுற்றித்திரிகிறது. அத்துடன் அவை வீதியை ஆக்கிரமித்து, படுத்துக்கொள்வதுடன் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களை விரட்டி கடிக்கிறது. எனவே அந்த நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலசுப்பிரமணியம், கோவைப்புதூர்.
ஆபத்தான சாலை
கோவை அவினாசி பிரதான சாலையில் தென்னம்பாளையம் சர்வீஸ் ரோட்டை இணைக்கும் இடத்தில் சாக்கடை கழிவுநீர் செல்ல கான்கிரீட் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கான்கிரீட் தற்போது உடைந்து உள்ளதால் அதில் தடுப்பான்கள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அந்த கான்கிரீட் அனைத்துமே இடிந்து விழ வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த சாலையை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
வெங்கடாசலம், சோமனூர்.
சாக்கடை கழிவுநீர் தேக்கம்
கோவை சவுரிபாளையம் கருணாநிதி நகரில் சாக்கடை கழிவுநீர் சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதனால் அடைப்பு காரண மாக கழிவுநீர் நிரம்பி சாலையில் செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை அடைப்பை சரிசெய்ய வேண்டும்.
கண்ணன், சவுரிபாளையம்.
பழுதான தெருவிளக்குகள்
பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி தென்றல் நகரில் தெரு விளக்குகள் பழுதடைந்து உள்ளதால் ஒளிரவில்லை. இதனால் இரவு நேரத்தில் அங்கு இருள் சூழ்ந்து இருப்பதால் நடந்து செல்லும்போது குற்ற சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான தெருவிளக்குகளை சரிசெய்து ஒளிர செய்ய வேண்டும்.
அப்புக்குட்டி, பொள்ளாச்சி.
சேறும் சகதியுமான சாலை
கேகாவை மாநகராட்சி 99-வது வார்டுக்கு உட்பட்ட வெள்ள லூர் சாலை அருகே இருக்கும் மேட்டுத்தோட்டம், காந்திநகர் பகுதியில் சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சேறும் சகதியுமாக உள்ள இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
தாஜ், போத்தனூர்.
ஆபத்தான மின்கம்பம்
கோவை மாநகராட்சி 55-வது வார்டு ஜெய்ஷிமாபுரத்தில் உள்ள 12-வது எண் கொண்ட மின்கம்பம் கான்கிரீட் பெயர்ந்து எந்த நேரத்திலும் கீழே விழக்கூடிய நிலை உள்ளது. அத்துடன் இந்த கம்பத்தில் கேபிள்கள் அதிகமாக கட்டப்பட்டு உள்ளதால், அவை அந்த வழியாக செல்பவர்கள் மீது விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிலையும் நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும்.
செந்தில், கோவை.
Related Tags :
Next Story