ஒற்றை குரங்கு அட்டகாசம்
வேடசந்தூர் அருகே ஒற்றை குரங்கு கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி, காந்திபாளையம், காசிபாளையம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் குரங்கு ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. அந்த கிராமங்களில் உள்ள மளிகை கடைகள், வீடுகளில் புகுந்து உணவுப்பொருட்களை அந்த குரங்கு தூக்கிச் செல்கிறது. மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் கொண்டு செல்லும் மதிய உணவுகளை பறித்து செல்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அந்த குரங்கை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story