மரக்கட்டையால் தாக்கியதில் விவசாயி சாவு
சமயநல்லூர் அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட விவசாயி இறந்தார். இது தொடர்பாக கொலை வழக்காக மாற்றி வாலிபரை ேபாலீசார் கைது செய்தனர்.
வாடிப்பட்டி,
சமயநல்லூர் அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட விவசாயி இறந்தார். இது தொடர்பாக கொலை வழக்காக மாற்றி வாலிபரை ேபாலீசார் கைது செய்தனர்.
தகராறு
சமயநல்லூர் அருகே வயலூரை சேர்ந்த பரமசிவம் மகன் மருதுபாண்டி (வயது 55) விவசாயி. இவர் கடந்த 23-ந்தேதி தனது வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த கூலு என்ற முத்துக்கருப்பன் மகன் சுரேஷ் (34) என்பவரும் தண்ணீர் பாய்ச்சுவதற்கு அங்கு வந்தார். இதில் இருவரில் முதலில் யார் தண்ணீர் பாய்ச்சுவது என போட்டி வந்ததில் வாய்த்தகராறு ஏற்பட்டது.
அதன்பின் அது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து மருதுபாண்டியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சாவு
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி மருதுபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தகராறு வழக்கை கொலை வழக்காக மாற்றி சுரேசை கைது செய்தனர்.
Related Tags :
Next Story