சிறுவர்கள் ஓட்டி வந்த 13 வாகனங்கள் பறிமுதல்
மதுரையில் சிறுவர்கள் ஓட்டி வந்த 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை,
மதுரை மாநகரில் சிறுவர்கள் மோட்டார் சைக்கிளை இயக்குவது வாடிக்கையாகி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்பேரில் மோட்டார் சைக்கிள்களை இயக்கும் சிறுவர்கள் மீதும் அவர்களது பெற்றோர்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று கூடல்புதூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுவர்கள் இயக்கி வந்த 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிறுவர்களின் பெற்றோர்கள் போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சிறுவர்களுக்கும், பெற்றோருக்கும் அறிவுரை வழங்கினர். மேலும் விதி மீறி வாகனங்கள் இயக்கியதற்கு ரூ.10,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
Related Tags :
Next Story