தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 29 Nov 2021 1:11 AM IST (Updated: 29 Nov 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை ெசய்து கொண்டார்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் படப்படித்தெருவில் வசித்து வந்தவர் சதீஷ்குமார் (வயது 22). இவரது பெற்றோர் வீடு திரும்பியதும் உள்தாழ்ப்பாள் போட்டு வீடு பூட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு கதவை உடைத்து உள்ளே சென்றபோது வீட்டுக்குள் சதீஷ்குமார் பிணமாக தொங்கியதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து தகவலறிந்த திருப்பரங்குன்றம் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story