தினத்தந்தி புகாா் பெட்டி
தினத்தந்தி புகாா் பெட்டி
பாலத்தில் பள்ளம்
சிவகிரி அருகே ஈரோடு மாவட்ட எல்லையான ஒத்தபனை என்ற இடத்தில் நொய்யல் ஆறு கடந்து செல்கிறது. இந்த நொய்யல் ஆற்றில் பாலம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தை இணைக்கும் ரோட்டில் இந்த பாலம் உள்ளது. இந்த பாலத்தின் ஒரு முனையில் தொடக்க பகுதியில் சிறிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த பள்ளத்தில் வாகனங்கள் இறங்கி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒத்தபனை, பொதுமக்கள்.
சாக்கடையை தூர்வார வேண்டும்
திண்டல் பாலாஜி கார்டன் பகுதியில் கடந்த 6 மாதங்களாக சாக்கடை தூர்வாரப்படவில்லை. இதனால் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பாலாஜி கார்டன்.
பஸ் பயணிகள் அவதி
ஈரோடு சென்னிமலை ரோட்டில் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதனால் காலை, மாலை நேரங்களில் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மாலை வேளையில் டவுன் பஸ்களில் கல்லூரி மாணவ-மாணவிகள் அதிகமாக ஏறுவதால் மற்ற நிறுத்தங்களில் பஸ் டிரைவர்கள் நிறுத்தாமல் சென்று விடுகிறார்கள். குறிப்பாக ரெயில்வே டீசல் பணிமனை பஸ் நிறுத்தத்தில் மாலை நேரத்தில் வெள்ளோட்டில் இருந்து ஈரோடு நோக்கி செல்லும் அரசு, தனியார் டவுன் பஸ்கள் நிற்காமல் செல்வதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் பஸ்களை நிறுத்த போக்குவரத்துக்கழக அதிகாரிகள், டிரைவர்களுக்கு உத்தரவிட வேண்டும்.
திருநாவுக்கரசு, காசிபாளையம்.
தெருவிளக்கு வசதி
சென்னிமலை ஒட்டப்பாறை காளிக்காவலசு நெசவாளர் கூட்டுறவு சங்க நகரில் ஏறக்குறைய 161 வீடுகள் உள்ளன. இங்கு கடந்த 4 ஆண்டுகளாக தெரு விளக்கு வசதி இல்லை. இதனால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் காணப்படுகிறது. உடனே தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பார்த்திபன், ஓட்டப்பாறை.
ரோட்டில் மது பார்
கோபி அருகே உள்ள நஞ்சை கோபி கிராமம் புதுக்கரைப்புதூர் பகுதியில் குட்டை உள்ளது. இந்த குட்டை பகுதியில் உள்ள ரோட்டை மது பிரியர்கள் பலர் பாராக பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் மது பிரியர்கள் தங்களுடைய வாகனங்களை ரோட்டை மறித்து நிறுத்தி விடுகிறார்கள். அதுமட்டுமின்றி மது பிரியர்கள் தாங்கள் கொண்டு வந்த மதுபாட்டில்களை ரோட்டில் போட்டு உடைத்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். இதனால் ரோட்டில் பொதுமக்கள் வாகனங்களிலோ, நடந்தோ செல்ல முடிவதில்லை. ரோட்டை பாராக மாற்றுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், புதுக்கரைப்புதூர்.
தேங்கும் சாக்கடை கழிவுநீர்
கஸ்பாபேட்டை ஊராட்சியில் முள்ளாம்பரப்பு நால்ரோடு அருகே நாதகவுண்டம்பாளையம் செல்லும் வழியில் சாக்கடை கழிவுநீர் வடிகால் உள்ளது. சாக்கடை கழிவுநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாக்கடை கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக சாக்கடையில் கொசு உற்பத்தியாகி அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை கழிவுநீர் செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கஸ்பாபேட்டை.
குண்டும், குழியுமான ரோடு
ஈரோடு பழைய ரெயில்வே நிலைய ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே குண்டும், குழியுமான ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
Related Tags :
Next Story