மதுராந்தகம் ஏரியில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தண்ணீர் வரத்து அதிகரிப்பு காரணமாக மதுராந்தகம் ஏரியில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
30 ஆயிரம் கனஅடி உபரி நீர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிக பெரிய ஏரிகளில் ஒன்று செங்கல்பட்டு ஏரி. வடகிழக்கு பருவமழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டி தானியங்கி ஷட்டர்கள், பிரதான கலங்கல் வழியாக வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேறுகிறது.
கலெக்டர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேற்று மதுராந்தகம் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நீள் முடியோன், உதவி செயற் இளநிலை பொறியாளர் சுமித்ரா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கிராம மக்களுக்கு எச்சரிக்கை
மதுராந்தகம் ஏரியில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்படுவதால் கிளியாற்று கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் மேடான பகுதிக்கு செல்ல ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு்ள்ளனர்.
Related Tags :
Next Story