பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை


பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
x
பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
தினத்தந்தி 29 Nov 2021 6:43 PM IST (Updated: 29 Nov 2021 6:43 PM IST)
t-max-icont-min-icon

பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

கோவை

கோவையை சேர்ந்தவர்  15 வயதான 10-ம் வகுப்பு மாணவி. இவரது தந்தை இறந்துவிட்டதால், அவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். இவருடன் கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த பெயிண்டரான  நாகமுத்து (வயது28) என்பவர் நெருங்கி பழகி உள்ளார். 

இந்தநிலையில் கடந்த 15.8.2018 அன்று மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் வந்த நாகமுத்து, மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல்பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல் மாணவி தனியாக இருக்கும்போது 4 முறைபாலியல்பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் மாணவி கர்ப்பமானார். 

இதுகுறித்து மாணவியின் தாய் நாகமுத்துவின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மாலைமாற்றி திருமணம் செய்துள்ளனர். குழந்தை திருமணம் என்பதால் இந்த திருமணம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் மாணவி தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இது குறித்து மாணவி கோவை கிழக்குப்பகுதி அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நாகமுத்துவை கைது செய்தனர்.
இந்தநிலையில் மாணவிக்கு  பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 2 வயது ஆகிறது.

இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி கே.யு.குலசேகரன் குற்றம்சாட்டப்பட்ட நாகமுத்துவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். 

அரசு தரப்பில் போக்சோ சிறப்பு வக்கீல் ரஷீதா ஆஜராகி வாதாடினார். தண்டனை விதிக்கப்பட்ட நாகமுத்து ஈரோடு மாவட்டம்பவானி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

Next Story