குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Nov 2021 7:49 PM IST (Updated: 29 Nov 2021 7:49 PM IST)
t-max-icont-min-icon

குண்டர் சட்டத்தில் கீழ் வாலிபர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

காஞ்சீபுரம் உட்கோட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்டு, தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவரான காஞ்சீபுரம், மாமல்லன் நகர், லாலாகுட்டை தெருவை சேர்ந்த தனபால் (வயது24) என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, தனபாலை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Next Story