வால்பாறையில் கடும் பனி மூட்டம்


வால்பாறையில் கடும் பனி மூட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2021 8:40 PM IST (Updated: 29 Nov 2021 8:40 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் கடும் பனி மூட்டம்

வால்பாறை

வால்பாறையில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். 

கடும் பனி மூட்டம் 

மலைப்பிரதேசமான வால்பாறையில் கடந்த வாரம் முதல் பனிக்காலம் தொடங்கி உள்ளது. லேசான வெயிலுடன் கலந்து மழைச்சாரலும் இருப்பதால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

அத்துடன் தற்போது பகல் நேரத்திலும் பனி மூட்டம் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை மற்றும் இங்குள்ள தேயிலை தோட்டங்களில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. 

வாகன ஓட்டிகள் அவதி 

குறிப்பாக வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் கடும் பனி மூட்டம் நிலவியதால், வாகனங்களில் வந்த சுற்றுலா பயணி களால் வாகனங்களை தொடர்ந்து ஓட்டிச்செல்ல முடியவில்லை. இதனால் அவர்கள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி னார்கள். சிலர் மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை ஒளிரவிட்ட படி வாகனங்களை ஓட்டிச்சென்றனர். 

மேலும் காலை நேரத்தில் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்த னர். ஆனால் சுற்றுலா பயணிகள் இந்த பனிமூட்டத்தில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

வெள்ளைநிற கோடுகள் 

வால்பாறையில் வரும் காலங்களில் பனி மூட்டத்தின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் மலைப்பாதையில் செல்லும் வாகனங்களின் அளவு அதிகரிக்கும். 

ஆனால் மலைப்பாதையில் உள்ள சாலையின் நடுவே போடப் பட்டு உள்ள வெள்ளைநிற கோடுகள் அழிந்து விட்டன. இத னால் சாலையின் நடுவே வெள்ளை கோடுகளை போடுவதுடன், ஆங்காங்கே ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும். மேலும் மலைப்பாதையில் வரும் சுற்றலா பயணிகள் தங்கள் வாகனங் களை கவனமாக ஓட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story