திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது
திம்பம் மலைப்பாதையில் லாரியில் ஏற்பட்ட பழுது காரணமாக 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதையில் லாரியில் ஏற்பட்ட பழுது காரணமாக 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்த மலைப்பாதையானது 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது ஆகும். தமிழகம் மற்றும் கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய பாதையாக இது உள்ளதால் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.
அதிக அளவுக்கு பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் உள்ள வளைவுகளில் திரும்ப முடியாமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும், பழுதாகி நிற்பதும் தொடர்கதையாகி வருகிறது.
பழுது
இந்த நிலையில் தாளவாடியில் இருந்து அந்தியூருக்கு கிரானைட் பாரம் ஏற்றிய லாரி ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் புறப்பட்டது. திம்பம் மலைப்பாதையின் 26-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது இந்த லாரியில் உள்ள ஆக்சில் கம்பி கட்டாகி விட்டது.
இதனால் லாரி பழுதாகி அப்படியே நின்று விட்டது. இதனால் ரோட்டின் இருபுறங்களிலும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து பாதிப்பு
இதைத்தொடர்ந்து சத்தியமங்கலத்தில் இருந்து மெக்கானிக் அழைத்து வரப்பட்டு லாரியில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணி நடைபெற்றது. நேற்று காலை 7 மணி அளவில் லாரியில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. இதையடுத்து வாகன போக்குவரத்து தொடங்கியது. 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் அந்த வழியாக பஸ், சுற்றுலா வாகனங்களில் வந்த பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story