ஈரோடு காந்திஜி ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு காந்திஜி ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ள காந்திஜி ரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு மண், கற்கள் கலவை கொட்டப்பட்டு பள்ளம் சரிசெய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலையில் மீண்டும் அதே பகுதியில் பள்ளம் உருவானது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story