கொடைக்கானலில் சாரல் மழை


கொடைக்கானலில் சாரல் மழை
x
தினத்தந்தி 29 Nov 2021 9:30 PM IST (Updated: 29 Nov 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் சாரல் மழை பெய்தது. மழையின் காரணமாக மலைப்பாதையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானல்: 

கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதலே தொடர் சாரல் மழை பெய்தது. பலத்த காற்றும் வீசியது. மலைப்பாதையில் பகல் நேரத்தில் மேக மூட்டமாக காணப்பட்டதால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி சென்றன.   

மழையின் காரணமாக நேற்று அதிகாலை பூம்பாறை செல்லும் மலைப்பாதையில் பெருமாள் மலை அருகே 2 மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் விரைந்து சென்று மரங்களை வெட்டி அகற்றினர். பலத்த காற்று காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்து, நகர்ப்பகுதியில் பல முறை மின்தடை ஏற்பட்டது.  இதனை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்தனர்.

Next Story