தொடர் மழையால் வீடு இடிந்தது
திண்டுக்கல்லில் தொடர் மழைக்கு வீடு ஒன்று இடிந்து விழுந்தது.
திண்டுக்கல்:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால் திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பாலகிருஷ்ணாபுரம், துரைராஜ்நகர், மரியநாதபுரம் உள்பட பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஒருசில இடங்களில் வெள்ளம் வடியாமல் உள்ளது. இதனால் பல வீடுகள் சேதம் அடைந்து வருகின்றன.
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் தனது மகள் மற்றும் பேரனுடன் சிறிய வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 3 பேரும் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழ தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் வீடு மொத்தமாக இடிந்து விழுந்து விட்டது. இதனால் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தன. நல்லவேளையாக வீட்டுக்குள் யாரும் இல்லாததால் அனைவரும் தப்பினர்.
Related Tags :
Next Story