சென்னிமலை அருகே வீடு புகுந்து 9 பவுன் நகை திருடிய தொழிலாளி கைது


சென்னிமலை அருகே வீடு புகுந்து 9 பவுன் நகை திருடிய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 29 Nov 2021 10:03 PM IST (Updated: 29 Nov 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே வீடு புகுந்து 9 பவுன் நகையை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

சென்னிமலை அருகே வீடு புகுந்து 9 பவுன் நகையை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி
சென்னிமலை அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 50). விவசாயி. சென்னிமலையில் உள்ள பொறையன்காட்டை சேர்ந்த மணி என்பவரின் மகன் செல்வகுமார் (34).
பூபதி குடும்பத்துடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். தோட்டத்தில் புதிதாக குடோன் கட்டும் வேலை நடைபெற்று வருகிறது. இதற்காக செல்வகுமார் கடந்த 2 மாதங்களாக பூபதியின் தோட்டத்திலேயே தங்கி மண்வெட்டி வேலையில் ஈடுபட்டார்.
நகை திருட்டு
இந்த நிலையில் செல்வகுமார் அதே ஊரை சேர்ந்த ஒருவரிடம் ½ பவுன் மோதிரத்தை கொடுத்து பணம் கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவர் பூபதியிடம் கூறியுள்ளார். உடனே அவர் தன்னுடைய வீட்டில் இருந்த பீேராவை பார்த்தபோது அதிலிருந்த 5 பவுன் தங்க சங்கிலி, 3½ பவுனில் டாலர் வைத்த தங்க சங்கிலி, ½ பவுன் தங்கமோதிரம் என மொத்தம் 9 பவுன் நகையை காணவில்லை. அவை திருட்டு போனது தெரியவந்தது.
உடனே இதுபற்றி பூபதி சென்னிமலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
கைது
விசாரணையில் சம்பவத்தன்று பூபதியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்வகுமார் உள்ளே சென்று பீரோவை திறந்து நகையை திருடியதையும், அதில் 5 பவுன் தங்க செயினை தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து பணம் பெற்றதையும் ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த 9 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story