அவதூறாக பேசமாட்டேன் என உறுதியளிக்க வேண்டும்-முன்ஜாமீன் வழக்கில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அவதூறாக பேசமாட்டேன் என உறுதியளிக்க வேண்டும் என்று முன்ஜாமீன் வழக்கில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மதுரை,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த முத்துராமன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில், தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பாக கடந்த மாதம் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தின் போது தமிழக முதல்-அமைச்சர் மற்றும் குடும்பத்தினரை தரக்குறைவாக பேசியதாக முரளிதரன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் நான் உள்பட பலர் மீது புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு அரசியல் ரீதியில் பழிவாங்கும் நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
பின்னர், முதல்-அமைச்சர், அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறாக பேச மாட்டேன் என மனுதாரர் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story