பாரபத்தி கண்மாய்க்கு தண்ணீர்விடக்கோரி திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம் முற்றுகை


பாரபத்தி கண்மாய்க்கு தண்ணீர்விடக்கோரி திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 30 Nov 2021 2:19 AM IST (Updated: 30 Nov 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

பாரபத்தி கண்மாய்க்கு தண்ணீர்விடக்கோரி திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம் முற்றுகையிட்டனர்.

திருப்பரங்குன்றம், 

திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனில் பாரபத்தி கிராமத்தின் வழியே நிலையூர் கம்பிக்குடி கால்வாய் செல்கிறது. தற்போது வைகைஅணையில் இருந்து நிலையூர் கம்பிக்குடி கால்வாய்க்கு தண்ணீர்திறக்கப்பட்டுள்ளதாலும் அதன் தண்ணீரானது விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்கிறது. ஆனால் நிலையூர் கம்பிக்குடி கால்வாய் அருகில் உள்ள பாரபத்தி கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். என்று  அப்பகுதி கிராம மக்கள் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 
இந்த நிலையில் நேற்று பாரபத்தியில் இருந்து திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்திறகு கிராம மக்கள் திரண்டு வந்தனர்.பின்னர் அவர்கள் தங்கள் கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். என்று கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து கிராமமக்களிடம் தாசில்தார்சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story